“தீபத்திருவிழா மகிழ்ச்சி, செழிப்பை வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்“- பிரதமர் மோடி

 
மோடி மோடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்துடன் ஒளிரட்டும். நம்மைச் சுற்றி நேர்மறையின் உணர்வு நிலவட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.