ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை- RTI தகவல்

 
modi

பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு RTI மூலம் கோரப்பட்டிருந்த கேள்விக்கு ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் RTI நகலை X இல் (முன்னர் ட்விட்டர் என அழைக்கப்பட்டது) பகிர்ந்து கொண்டு #MyPmMyPride என்று கூறினார்.

புனேவைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஆர்வலர் பிரஃபுல் பி சர்தா தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் முதல் கேள்வி, 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து பிரதமர் மோடி எத்தனை நாட்கள் அலுவலகத்தில் கலந்து கொண்டார்? என்பதுதான். அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், “பிரதமர் எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து எந்த விடுமுறையும் எடுக்கவில்லை” எனக் கூறியுள்ளது.

இந்தியாவின் பிரதமராக பதவியேற்றது முதல் இன்றுவரை பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் குறித்து இரண்டாவது கேள்வியில் கேட்கப்பட்டிருந்தது. அதற்கான பதிலில், 
மே 2014 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து திரட்டப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை 3,000 (இந்தியா மற்றும் வெளிநாடுகள் உட்பட) தாண்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்றார்.