எதிர்க்கட்சிகள் கறுப்பு உடை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்துகிறார்கள் - பிரதமர் மோடி

 
modi

அண்மை  காலமாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கறுப்பு உடை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்துகிறார்கள் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
 
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரண நிதி வழங்கவில்லை என தமிழக அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியும் மத்திய அரசு பதில் அளிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன.  இதேபோல் கேரளாவை சேர்ந்த எம்.பிக்களும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. 

mps

இந்த நிலையில், அண்மைக் காலமாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கறுப்பு உடை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்துகிறார்கள் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் விடைபெறும் உறுப்பினர்களை பாராட்டி பிரதமர் மோடி பேசும் போது, வழக்கமாக நாடாளுமன்றத்தின் உள்ளே அமர்ந்து அனைவரும் விவாதிப்போம். அண்மைக் காலமாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கறுப்பு உடை அணிந்து ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்துகிறார்கள் என கூறினார்.  திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் கறுப்பு உடை அணிந்து போராடிய நிலையில் பிரதமர் மோடி அதனை விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.