ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் திரண்டுள்ளன - பிரதமர் மோடி

 
பிரதமர் மோடி பிரதமர் மோடி

ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் இன்று திரண்டுள்ளன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் (ஜூன்) 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 6 மாநில முதல்வர்கள் உள்பட 17 எதிர்கட்சிகள் பங்கேற்றன. இதனைத்தொடர்ந்து   2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. மாலை 6 மணியளவில்  பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபேற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ,திரிணாமூல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர். இன்றைய தினம் இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

patna meeting

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் இன்று திரண்டுள்ளன. நமது அரசு மக்களால், மக்களுக்காக ஆட்சி செய்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கொள்கை குடும்பத்தால், குடும்பத்திற்காக அரசியல் செய்வதே. வம்ச அரசியலின் நெருப்புக்கு நாடு பலியாகியுள்ளது. அவர்களுக்கு அவர்களின் குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம்.  நாட்டில் உள்ள ஏழைகளின் வளர்ச்சி அல்ல. இவ்வாறு கூறினார்.