மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 
pm modi pm modi

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வருகின்றன.மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் , பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த எட்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிப்போயுள்ளன.

Parliament

அத்துடன் ‘இந்தியா’ கூட்டணியின் எம்பிக்கள் குழு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துள்ளனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பான கோரிக்கை மனுவை குடியரசுத்தலைவரிடம் அளித்துள்ளனர். இந்த சந்திப்பில் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் சரத்பவார், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார், வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

modi

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மூத்த அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல்,  நிதின் கட்கரி உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி  மற்றும் அரசின் வியூகம் குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார்.