‘ஏசியான்’ கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு - ஜகார்த்தா சென்றடைந்தார் பிரதமர் மோடி

 
tn

இந்தோனேசியாவில் நடைபெறும் ‘ஏசியான்’ கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜகார்த்தா சென்றடைந்தார் பிரதமர் மோடி.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் 20வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடும் , கிழக்கு ஆசியா உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து விமான மூலம் புறப்பட்டார்.  இன்று அதிகாலை 3 மணி அளவில் பிரதமர் மோடி விமான நிலையத்தில் ஜகார்தா விமான நிலையத்தில் நிலையத்தை சென்றடைந்தார்.

tnt

இந்நிலையில் ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா தலைநகர் ஜகாத்தா சென்றடைந்த,  பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.  அங்குள்ள  நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியை இந்தோனேசிய வாழ் இந்தியர்களும் தேசிய கொடிகளை  ஏந்தியவாறு மேளம் தாளம் முழங்க வரவேற்றனர்.

tn

மாநாடு முடிந்த உடன் இன்று காலை 11 45 மணிக்கு மீண்டும் விமான மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார் மோடி.   இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால் மோடி மீண்டும் டெல்லி வருவது குறிப்பிடத்தக்கது.