சிலிண்டரின் விலையை ₹100 குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு

 
cylinder

மகளிர் தினத்தை ஒட்டி கேஸ் சிலிண்டரின் விலையை ₹100 குறைத்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

cylinder

 மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலையை ₹100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக  பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக மகளிருக்கு நிதிச்சுமையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி , இன்று, மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100  குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது.  இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது நாரி சக்திக்கு பயனளிக்கும்.

சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு ‘எளிதாக வாழ்வதை’ உறுதிசெய்வது என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்று சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.