குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து!!

 
tn

இஸ்லாமியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

tn

இஸ்லாமியர்களின் பெருவிழாவான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் தலைவர்கள்  தங்கள் ரமலான் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துச் செய்தியில், "ரமலான் மாதத்தின் முடிவில் கொண்டாடப்படுகிறது ஈகைப் பெருநாள். இப்பண்டிகையைக்கு ஏழைகளுக்கு உணவும், உணவு தானியமும் தானமாக வழங்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை நல்லிணக்கத்தையும், அமைதியும், வளமும் நிறைந்த சமூகத்தையும் ஊக்குவிக்கிறது. இந்நாளில் நாம் அனைவரும் மனிதகுல சேவைக்காக நம்மை அர்ப்பணிப்போம். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப் பாடுபடுவோம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

modi

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, "ரம்ஜான் நல்வாழ்த்துகள். இந்த புனிதமான தருணம் சமூகத்தில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் தழைத்தோங்கச் செய்யட்டும். அனைவரையும் ஆரோக்கியமும், வளமும் சூழட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.