கருத்துக்கணிப்புகளால் ரூ.38 லட்சம் கோடி ஊழல்! மோடி, அமித்ஷாவுக்கு தொடர்பு: ராகுல்காந்தி

 
ராகுல் காந்தி

பங்குசந்தை ஊழலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக சம்மந்தபட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “இந்திய வரலாற்றில் நடைபெறாத மிகப்பெரிய ஊழல் பங்குச்சந்தையில் நடந்துள்ளது. பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது. போலியான கருத்து கணிப்புகளால் முதலீட்டாளர்களுக்கு ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குசந்தையில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

ஜூன் 4 முன்னர் பங்குகளை வாங்கும் படி மே 13 தேதி அமித்ஷா கூறுகிறார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட நேரத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியது ஏன்? இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துகொண்டு போலியான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட கருத்துக் கணிப்புகளை திணித்து உள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புக்கும் வெளிநாட்டு முதலீடுகளும் தொடர்பு உள்ளது. போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட வைத்து அதன்மூலம் பங்குச்சந்தைகளை ஏற்றியும் இறக்கியும் செய்து இது குறித்த விவரங்களை முன்கூட்டியே சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் வெளியிட்டு இதன் மூலமாக ஊழலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக அமைவதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக அமைவதற்கு முன்பாகவே மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடதக்கது.