பெரும் பதற்றம்! பிரதமர் மோடி விமானத்தில் கோளாறு
Updated: Nov 15, 2024, 17:31 IST1731672101267
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
தேர்தல் பரப்புரையை முடித்துக் கொண்டு திரும்பும்போது கோளாறு ஏற்பட்டதால் தியோகர் விமான நிலையத்தில் பிரதமர் மோடி காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. பிரதமர் மோடியின் விமானம் தியோகர் விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது, இதனால் மோடி டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
முன்னதாக இன்று பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் இருந்து ரூ.6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.