பங்குச்சந்தை மோசடி- ராகுல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமற்றவை: பாஜக

 
piyush goyal

பங்குச்சந்தை தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் நடைபெறாத மிகப்பெரிய ஊழல் பங்குச்சந்தையில் நடந்துள்ளது. பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது. போலியான கருத்து கணிப்புகளால் முதலீட்டாளர்களுக்கு ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குசந்தையில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்,  “பங்குச்சந்தை தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடம் அச்சம் ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. மூன்றாம் முறை மோடி பிரதமராவதால் ராகுல்காந்தி அச்சம் கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நமது பங்குச்சந்தை மதிப்பு 5 ட்ரில்லியன் டாலர்களை கடந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.