ரூ.2,000 நோட்டு விவகாரம், பொருளாதாரம் மிகவும் ஸ்திரமற்ற ஒன்றாக பார்க்கப்படும் சூழ்நிலை உள்ளது.. பினராயி விஜயன்

 
தந்தை பெரியார் பிறந்தநாள்; தமிழில் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவு!

ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஸ்திரமற்ற ஒன்றாக பார்க்கப்படும் சூழ்நிலை உள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கடந்த 7 ஆண்டுகளில், நாட்டில் புழக்கத்தில் இருந்த கரன்சிகள் திரும்ப பெறப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஸ்திரமற்ற ஒன்றாக பார்க்கப்படும் சூழ்நிலை உள்ளது. நோட்டு தடை, ஜி.எஸ்.டி. அமலாக்கம் மற்றும் கோவிட் லாக்டவுன்கள் அனைத்தும் இந்திய நிதித்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. 

பணம்

நாட்டில் பயங்கரவாதத்தை நாம் பார்த்தால், கடந்த 6 ஆண்டுகளில் 300 தாக்குதல்களில் சுமார் 1,300 உயிர்கள் பலியாகியுள்ளன. தீவிரவாதத்தை கையாள்வதில் மத்திய அரசின் தோல்விக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் உள்பட பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வரம் நேரம் இது. நோட்டு தடைக்கு பிறகுதான் புல்வாமா தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் குறித்து அப்போதைய காஷ்மீர் கவர்னர் கூறிய கருத்துக்களை அனைவரும் கேட்டிருப்பார்கள். அதன் விவரங்களுக்கு நான் இப்போது அதிகம் செல்லவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்… இன்று 2ம் ஆண்டு நினைவஞ்சலி

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும், செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து சில்லரை மாற்றி கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை மாற்ற படிவம், அடையாளச் சான்று தேவையில்லை என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.