இனி மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும்- மத்திய அரசு

 

இனி மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும்- மத்திய அரசு

இந்தியாவில் இன்று மட்டும் 2,75,306 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 1,625 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,57,767 ஆக அதிகரித்தது .அதேபோல் உயிரிழந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 178,793 ஆக உயர்ந்துள்ளது.

இனி மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும்- மத்திய அரசு

கொரோனா பரவலின் இரண்டாம் அலை பரவல் இந்தியாவை பாடாய் படுத்திவரும் சூழலில், கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி திட்டத்தின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தியாகும் தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொது சந்தைக்கும் விற்பனைக்கும் அளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தடுப்பூசியே கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம். அதிகம் பேர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஊக்குவிக்க மருத்துவர்களை கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.