இன்று 93 தொகுதிகளில் 3 ஆம் கட்ட தேர்தல் - எங்கெல்லாம் வாக்குப்பதிவு?

 
election

நாடு முழுவதும் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று மூன்றாம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு லட்சத்துக்கு 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; குஜராத் மாநிலத்தில் ஒரே கட்டமாக 25 தொகுதிகளிலும், கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

election

மக்களவை தேர்தல் - நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு எங்கெல்லாம்?

▪️ குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் தேர்தல்

▪️ மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள்

▪️ உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள்

▪️ மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள்

▪️ சத்தீஸ்கரில் 7 தொகுதிகள்

▪️ பீகாரில் 5 தொகுதிகள்

▪️ அசாம், மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகள்

election commision

▪️ கோவா, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமனில் தலா 2 தொகுதிகள்

 *குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிவிட்டதால், 25 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு  என மொத்தம் இன்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது