ஓடும் ரயிலிலிருந்து திடீரென கொத்து கொத்தாக குதித்த பயணிகள்! அதிர வைக்கும் காரணம்
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் திடீரென டிக்கெட் சோதனை நடத்தப்பட்டதால், டிக்கெட் இல்லாத பயணிகள் அவசரமாக ரயிலிலிருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கியில், ஓடும் ரயிலில் இருந்து மக்கள் குதித்து ஓடுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அயோத்யா-லக்னோ ரயிலில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், ரசௌலி ரயில் நிலையத்தில் சோதனை செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. டிக்கெட் பரிசோதகரைக் கண்டதும், பயணச்சீட்டு இல்லாத பல பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து ஓடினர். ரயிலில் இருந்த மற்ற பயணிகள் தங்கள் கைபேசி கேமராக்களில் இந்தக் காணொளியைப் பதிவு செய்துள்ளனர். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.பயணச்சீட்டு இல்லாததால் பல பயணிகள் கழிப்பறைகளில் ஒளிந்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் உயிரை பணயம் வைத்து, ஓடும் ரயிலிலிருந்து குதித்ததனர். ரயிலிலிருந்து குதித்தவர்கள் தரையில் விழுவதையும் வைரல் வீடியோக்கள் காட்டுகின்றன.
ரசௌலி ரயில் நிலையத்தில் அயோத்யா-லக்னோ ரயிலில் நடத்தப்பட்ட சோதனையின்போது, டிக்கெட் பரிசோதகர் பயணச்சீட்டு இல்லாத 371 பயணிகளை சம்பவ இடத்திலேயே பிடித்தனர். பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு எதிராக ரயில்வே குழுவினர் ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

