"ஜன.31ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்" - வெளியானது முக்கிய அறிவிப்பு!!

 
ttn

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற ஒன்றாம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின் போது பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் ,முதலீட்டாளர்கள் என பல தரப்பினரிடையே எதிர்பார்ப்பு என்பது அதிகரிக்கும்.பட்ஜெட்டில் வருவாய் பட்ஜெட் , மூலதன பட்ஜெட் என இரு பிரிவுகள் உள்ள நிலையில் வருவாய் பட்ஜெட்டில்  வருவாய் வரவு மற்றும் வருவாய் செலவுகள் பற்றிய தகவல்கள் இருக்கும்.  மூலதன பட்ஜெட்டில் மூலதன வரவு மற்றும் செலவுகள் பற்றிய தகவல்கள் இருக்கும்.

tn

 குறிப்பாக கொரோனா பெருந்தொற்று  காலத்தில் மத்திய அரசு மட்டுமின்றி,  மாநில அரசுகளும் மூலதன செலவு என்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ள காரணத்தினால் பொருளாதார சுழற்சி மீண்டும் கொரோனா 2 அலைக்கு பிறகு  தொடங்கியுள்ளது.  இதனால் அதை வேகப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் தொழில் துறையினர் மத்தியில் இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  2022-23ம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஜனவரி 31ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும் , மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத் தொடர்  நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

tn

மக்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 200 பேர், மாநிலங்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 69 பேர் மற்றும் அவை தொடர்பான இதர அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 133 பேர் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், வளாகம் உள்ளிட்ட பகுதிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.