நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

 
Parliament

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவே ஆகும். இருப்பினும் ஆண்டின்  முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

parliament

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. வழக்கமாக சனிக்கிழமை நாடாளுமன்ற அலுவல்கள் நடக்காத நிலையில் இன்று கூடவுள்ளதால் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

modi

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று அவைக்கு வர தலைமை கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.  முக்கிய நாடாளுமன்ற அலுவல் இருப்பதால் கட்டாயம் அவைக்கு வர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.