"ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம்" - மோடிக்கு ராகுல் கண்டனம்!!

ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். 64 ஆயிரத்து 500 சதுர அடியில் முக்கோண வடிவில் நான்கு மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது .ஆனால் மரபு படி நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுத்துள்ள நிலையில் , நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சூழலில் திமுக, விசிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட19 எதிர்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேறப்போவதில்லை என்னும் முடிவை மறுபரீசிலனை செய்து, திறப்பு விழாவில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

राष्ट्रपति से संसद का उद्घाटन न करवाना और न ही उन्हें समारोह में बुलाना - यह देश के सर्वोच्च संवैधानिक पद का अपमान है।
— Rahul Gandhi (@RahulGandhi) May 24, 2023
संसद अहंकार की ईंटों से नहीं, संवैधानिक मूल्यों से बनती है।

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசுத்தலைவரை அழைக்காதது, இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல்;
ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம், அது இந்திய அரசியலமைப்பின் மாண்பினால் கட்டப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.