ஓயோ நிறுவனர் ரித்தேஷின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு...

 
ஓயோ நிறுவனர் ரித்தேஷின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு...

இந்தியாவின் இளம் பில்லியரான  OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை குருகிராமில், 20 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.  

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பிறந்து வளர்ந்தவர்  ரித்தேஷ் அகர்வால்.  தனது 19 வயதில்  கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு, OYO ஹோட்டல் நிறுவனத்தை ஆரம்பித்தார். 2011 ஆம் ஆண்டு Oravel stays என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், 2013 ஆம் ஆண்டு OYO Hotels & Homes என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் கிட்டத்தட்ட 800 நகரங்களில் கிளைகள் அமைத்து தங்களது சேவைகளை வழங்கி வருகிறது.  இளம் வயதிலேயே பில்லியனராக உருவெடுத்த  ரித்தேஷ் அகர்வால், வர்த்த  சந்தையில் பலராலும் பாராட்டப்பட்டார்.  

ஓயோ நிறுவனர் ரித்தேஷின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு...

இந்நிலையில் இன்று  ஓயோ ரூம்ஸ் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழந்துள்ளார்.  ஹரியானா மாநிலம் குருகிராமில்  உள்ள செக்டார் 54 இல் அமைந்துள்ள DLFன்  தி க்ரெஸ்ட் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பின்  20 வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.  முன்னதாக  மதியம் 1 மணியளவில்  யாரோ ஒரு நபர் மடியில் இருந்து விழுந்ததாக DLF சொசைட்டியில் இருந்து   பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
 
பின்னர் காவல்துறையினர்  சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்ததில், விழுந்த நபர் ரமேஷ் பர்சாத் அகர்வால் என்று  அடையாளம் தெரியவந்தது.   உடனடியாக அவரது உடலை மீட்டு  பராஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  
 ஓயோ நிறுவனர் ரித்தேஷின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு...
கடந்த 7ம் தேதி தான் தொழிலதிபர் ரித்தேஷ் அகர்வால்,  கீதன்ஷா சூட் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.  டெல்லியில் உள்ள நட்சத்திர தாஜ்  பேலஸில் பிரம்மாணடமாக நடைபெற்றது.  இதில்  உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப தொழில்முனைவோர்களில் ஒருவரான ஜப்பானிய கோடீஸ்வரரும் , SoftBank(சாப்ட் பேங்க்)  குழும நிறுவனருமான மசயோஷி சன் பங்கேற்றிருந்தார். அத்துடன் பேடிஎம் நிறுவன தலைவர் உள்ளிட்ட பல தொழில்முனைவோர்கள் இந்தத் திருமணத்தில் பங்கேற்றிருந்தனர். கடைசியாக தனது மகன்  திருமணத்தில் ரமேஷ் அகர்வால் பங்கேற்றிருந்தார். அந்தப் புகைப்படங்கள் கூட வெளியாகியிருந்தது. இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.