பிஸ்கட் வாங்க சென்ற 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 70 வயது கடைக்காரர்
அசாம் மாநிலத்தில், பிஸ்கட் வாங்கச் சென்ற 7 வயது சிறுமியை 70 வயது முதியவர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டம், நாம்ரூப் பகுதியில் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி, தனது வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடைக்கு பிஸ்கட் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது கடையில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட 70 வயதுடைய கடை உரிமையாளர் திலீப் ராய், அச்சிறுமியைக் கட்டாயப்படுத்தி கடையின் உட்பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு, கடுமையான வலியுடன் அழுதுகொண்டே சிறுமி தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். சிறுமியின் உடலில் இருந்த காயங்களையும், அவரது அழுகையையும் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த முதியவர் தனக்கு இழைத்த கொடூரத்தைச் சிறுமி பெற்றோரிடம் அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதனால் கொதித்தெழுந்த பெற்றோரும், உறவினர்களும் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்று திலீப் ராய்க்கு எதிராக புகார் அளித்தனர். இவ்வழக்கு தொடர்பாக காலிதுர் ரஹ்மான் என்ற அந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

