மகா கும்ப மேளா விவகாரம் - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

 
parliament

மகா கும்ப மேளா விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளி கிழமை தொடங்கியது. 2025-26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் கும்ப மேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

இந்த நிலையில், மகா கும்பமேளா விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல், உயிரிழப்புகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில், அமளிக்கு இடையே அவை நடவடிக்கைகள் தொடர்ந்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  எதிர்க்கட்சிகள் வழங்கும் நோட்டீஸ் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பினர்.