அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் கூண்அடோடு வெளிநடப்பு
டெல்லியில் மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திமுக, TMC, சமாஜ்வாதி, JMM, காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர்.
டெல்லியில் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதால், அவையை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆளும்கட்சி- எதிர்க்கட்சி இடையே மோதல் வெடித்துள்ளது.
இதையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திமுக, TMC, சமாஜ்வாதி, JMM, காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். உத்தவ் தாக்கரே சிவசேனா (UBT) கட்சியின் 6 எம்.பி.க்கள் ஷிண்டே சிவசேனாவில் இணைந்ததை அங்கீகரித்ததற்கும், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு TMC கட்சியின் 20 அதிருப்தி எம்.பி.க்கள் தரப்புக்கு தனியாக அழைப்பு விடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திரினாமுல் காங். அதிருப்தி எம். பி-க்கள் கலந்து கொண்டதால் மம்தா அவர்களுக்கு ஆதரவாக திமுக-வுடன் இணைந்து இடதுசாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

