அதானி விவகாரம்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் - சோனியா, ராகுல் காந்தி பங்கேற்பு

 
protest

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள்  முடங்கியது.  விடுமுறைக்குப் பின்னர் திங்கள் கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இரு அவைகளிலும் தொடங்கியது. அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும்,  மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பவலியுறுத்தினர்.   இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அதேவேளை, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

Lokh sabha


 
இந்தநிலையில், 5-வது நாள் அலுவலுக்காக இன்று காலையில் நாடாளுமன்றம் கூடியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழங்கள் எழுப்பத் தொடங்கினர். பல உறுப்பினர்கள் மையப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் சபையில் ஆடியோ துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சபாநாயாகர் ஓம் பிர்லா உறுப்பினர்களிடம் அவை இயங்க அனுமதிக்குமாறு வலுயுறுத்தினார். ஆனாலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழுக்கங்களை எழுப்பியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவையிலும் அமளியில் ஈடுபட்டதால் திங்கள் கிழமை வரை  இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அதானி விவகாரம் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக பார்லிமென்ட் வளாகம் முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, அக்கட்சி எம்.பி., ராகுல்காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.