பா.ஜ.க.வில் சேர்ந்த ஊழல் அரசியல்வாதிகள் தாமதமான விசாரணையை எதிர்க்கொள்கின்றனர்... எதிர்க்கட்சி தலைவர்கள் மோடிக்கு கடிதம்

 
மோடி

பா.ஜ.க.வில் சேர்ந்த ஊழல் அரசியல்வாதிகள் தாமதமான விசாரணையை எதிர்க்கொள்கின்றனர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 8 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், உத்தவ் தாக்கரே, தெலங்கான முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்  உள்பட எட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு பிரதமர் மோடிக்கு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்க இயக்குனரகம் போன்ற மத்திய அமைப்புகளை அரசாங்கம் தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை சிக்க வைக்கிறது. அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை சுட்டிக் காட்டி, பா.ஜ.க.வில் சேர்ந்த ஊழல் அரசியல்வாதிகள் தாமதமான விசாரணையை எதிர்க்கொள்கின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களின் கவர்னர் அல்லது டெல்லியின் துணைநிலை கவர்னராக இருந்தாலும் சரி, பா.ஜ.க. அல்லாத அரசுகளால் நடத்தப்படுடம் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே விரிவடையும் விரிசலின் முகமாக கவர்னர்கள் மாறி விட்டனர். மேலும் கூட்டாட்சியின் உணர்வை அச்சுறுத்துகிறது, இது மத்திய அரசின் வெளிப்பாடு இல்லாத போதிலும் மாநிலங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதன் விளைவாக இந்திய ஜனநாயகத்தில் கவர்னர்களின் பங்கு என்ன என்று நம் நாட்டு மக்கள் இப்போது கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை

மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக ஒரு சிறிய ஆதாரம் கூட இல்லாதபோதிலும் 2023 பிப்ரவரி 26ம் தேதியன்று அவர் சி.பி.ஐ.யால் முறைகேடாக கைது செய்யப்பட்டார். சிசோடியா கைது நாடு முழுவதும் மக்களை கொதிப்படைய செய்துள்ளது.  அவரது கைது உலகம் முழுவதும் ஒரு அரசியல் சூனிய வேட்டைக்கு உதாரணமாக குறிப்பிடப்படும். சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சியின் கீழ் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்று உலகம் சந்தேகம் மட்டும் பட்டதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.