‘ஆபரேஷன் சிந்தூர்’.. அனல் பறக்கும் விவாதத்திற்கு காத்திருக்கும் மக்களவை..!!

 
 ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அனல் பறக்கும் விவாதத்திற்கு காத்திருக்கும் மக்களவை..!!  ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அனல் பறக்கும் விவாதத்திற்கு காத்திருக்கும் மக்களவை..!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக  மக்களவையில் இன்று அனல் பறக்கும் சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல்  என முக்கிய விவகாரங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறாமலே இருந்து வந்தன. இந்த நிலையில் இன்று பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்ம்ப் மத்தியஸ்தம்  செய்தது உள்ளிட்ட  பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று பிறபக,ல் 12 மணியளவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார்.  

sindoor

16 மணிநேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளிக்க உள்ளார்.  இந்த விவாதத்தின் போது, பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என எதிகட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில்,  அவர் விவாதத்தின் போது குறுப்பிட்டு பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

அதேநேரம்  எதிர்கட்சியை சேர்ந்த அனுராக் தாக்கூர், சுதான்ஷு திரிவேதிம் நிஷிகாந்த் போன்ற முக்கிய எம்.பிக்களும்,  மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மலிக்கார்ஜுன கார்கே,  சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பதிலடி கொடுக்க களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.