ஒரே நாடு ஒரே தேர்தல்- ஆய்வுக்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு

 
ramnath kovindh

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ramnath

குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே.சிங் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பரிந்துரைகளை இந்த குழு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே  தேர்தல் சாத்தியமா என்பதை ஆய்வு செய்வதற்காகவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கபட்டுள்ளது.  தேர்தல் தொடர்பாகவும் சட்ட திருத்தம் தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டிய குழுவில் நீதிபதிகளோ,இந்திய தலைமை தேர்தல் ஆணையர்களோ இல்லை என்பது குறிப்பிடதக்கது.


பிரதமர் மோடியின் திட்டமான ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசின் கொள்கைத் திட்டமாக அறிவிக்கப்பட்டு, அதனை சட்டமாக இரு அவைகளிலும் அவசர அவசரமாக நிறைவேற்றிவிட்டு, வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டியே நடத்தப் பெற திட்டமிட்டு, இதில் இறங்கியிருக்கிறார்கள்.