ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா- நாளை தாக்கல் இல்லை!
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் நாடாளுமன்றத்திற்கு, மாநில சட்டப்பேரவைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தமிழகத்திற்கு கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தேர்தல் செலவு மிச்சமாகும் என மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான 2 மசோதாக்களை நாளை (டிச.16) தாக்கல் செய்ய பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில், திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. அந்த மசோதாக்களின் நகல்களை அனைத்து எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு வழங்கியிருந்தது. அரசியலமைப்பு திருத்தத்தை கோரும் ஒரு மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோத நாளை தாக்கல் செய்யும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் மக்களவை செயலகம் இன்று வெளியிட்ட அலுவல் பட்டியலில் இருந்து ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்வது நீக்கப்பட்டுள்ளது.