பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு - லுக் அவுட் நோட்டீஸ்!!

 
tn

சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக பகீர் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. எச்.டி. ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் மீதும் ஏற்கனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.   பாலியல் புகாருக்கு உள்ளான எச்.டி.  ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ஜெர்மனி தப்பி சென்றுள்ளார். எச்.டி. ரேவண்ணா கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மூத்த சகோதரர் ஆவார்.  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி அறிவத்துள்ளது. 

tn

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.  இருப்பினும் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பு சென்றுள்ளார்.  ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ள நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இருப்பினும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் லுக் அவுட்  நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது . சிறப்பு விசாரணைக் குழு இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் ,துறைமுகங்களில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். புதிய புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாரில் பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது வழக்கு உள்ளது; இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராவதை தொடர்ந்து தவிர்க்கும் பட்சத்தில் கைது செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.