பைக்கில் பட்டாசு கொண்டு சென்றபோது திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி
ஆந்திர மாநிலம் ஏலூரில் பைக்கில் பட்டாசு கொண்டு சென்றபோது திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளியை பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஏளூரில் பைக்கில் தீபாவளிக்காக பட்டாசு வாங்கி கொண்டு பைக்கின் முன்புறத்தில் மூட்டையாக வைத்து கொண்டு சென்றபோது வெடித்து சிதறியது. இந்த தீ விபத்து பைக்கில் இருந்த பட்டாசு பை சாலையில் உராசி கொண்டே சென்றுள்ளது. இதில் தரையில் உரசி கொண்டே சென்றதில் தீபிடித்தது தெரிய வந்தது. இந்த வெடிவிபத்தில் பைக்கில் பட்டாசு கொண்டு சென்ற துர்காசி சுதாகார் உடல் சிதறி இறந்தார். மேலும் அங்கு சாலையோரம் நின்று இருந்த 4 தபேலு சாய், சதீஷ், ஷஷி, ஸ்ரீநிவாஸ், பெத்திராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் மருத்துவமனையில் அனுமதி#AndhraPradesh | #FireCrackerAccident pic.twitter.com/5XD1qfJCqw
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 31, 2024
இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதாகரின் உடல் ஏலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வாங்கி சென்றபோது வெடித்து சிதறிய காட்சிகள் அங்குள்ள ஒரு வீட்டில் வைத்திருந்த சி.சி.கேமிராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது மட்டும் அல்ல. வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.