"ஓணத்தை ஒட்டி மக்கள் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட வேண்டும்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து!!

 
tn

ஓணம் திருநாளை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் ஓணம் தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

Onam

ஓணம் பண்டிகை கடந்த 30ஆம் தேதி அஸ்தம் நட்சத்திரம் அன்று தொடங்கி 10 நாட்கள் வரை நடைபெறுகிறது. பத்தாம் நாள் ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது . ஓணம் திருநாளையொட்டி அத்திப்பூ கோலமிட்டு அறுசுவை உணவுகளை மகாபலிக்கு படைத்து வழிபடுவது வழக்கம். ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகை கேரளா மாநில எல்லையான மலையாள மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

tn

இந்நிலையில் ஓணம் திருநாளை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , "ஓணம் என்பது பாகுபாடுகளைக் கடந்து மனித மனங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும்.செழிப்பு, வளம், அமைதி போன்ற கனவுகளை நிறைவேற்றும் பண்டிகை ஓணம். ஓணத்தை ஒட்டி மக்கள் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட வேண்டும் என்று குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.