ஒமிக்ரான் வைரஸ் சாதாரண ஜலதோஷம் அல்ல - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் எச்சரிக்கை!!

 
vk paul

ஒமிக்ரானை மக்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக புதிய வகை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிரடியாக உயர்ந்து வருகிறது. நாட்டில் இதுவரை 5,488 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 1,367 பேரும், ராஜஸ்தானில் 792 பேரும், டெல்லியில் 549 பேரும், கேரளாவில் 486 பேரும், கர்நாடகாவில் 479 பேரும், மேற்குவங்கத்தில் 294 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 275 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், "மகாராஷ்டிரா ,மேற்கு வங்காளம் ,டெல்லி ,தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம் ,கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.  கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு  1.1 சதவீதமாக இருந்த நிலையில் நேற்று 11.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் ஒமிக்ரான் தொற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

Corona

அதேபோல் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, ஒமிக்ரான்  வைரஸ் சாதாரண ஜலதோஷம் அல்ல . இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.  நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.  தடுப்பூசி போடவேண்டும் தொடர்ந்து கொரோனா  கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.  கொரோனாவுக்கு  எதிரான போரில் தடுப்பூசி என்பது மிக முக்கிய தூணாக  உள்ளது என்றார்.