இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5, 753 ஆக அதிகரிப்பு...

 
ஒமைக்ரான்


இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  5,753 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒருபுறம் உலக நாடுகளை உலுக்கி வரும் சூழலில், தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸும் உலகம் முழுக்க வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்ப்படுத்தி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவு வருகிறது... இதில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருந்து வருகிறது.  

ஒமைக்ரான்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  அதேபோல்  நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 5,488 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி நாடு  முழுவதும்  உள்ள 28 மாநிலங்களில் 5,753 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  அதிலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது..

ஒமைக்ரான்

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 620 பேர் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1,367 பேருக்கும் , ராஜஸ்தானில் 792 பேருக்கும் , டெல்லியில் 549 பேருக்கும், கர்நாடகாவில் 479 பேருக்கும், கேரளாவில் 486 பேருக்கும் , ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 9 ஆவது இடத்தில் உள்ளது.  அதேபோல் கடந்த 24 மணிநேர்த்தில் 2,162 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.