கர்நாடக தேர்தல் தோல்வியால் ஜம்மு காஷ்மீரில் தேர்தலை உடனடியாக நடத்த பா.ஜ.க.வுக்கு தைரியம் இருக்காது.. உமர் அப்துல்லா

 
முதல்ல காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுங்க.. அப்புறம்தான் தேர்தல்.. மத்திய அரசுக்கு செக் வைத்த உமர் அப்துல்லா

கர்நாடக தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், ஜம்மு காஷ்மீரில் உடனடியாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு தைரியம் இருக்காது என்று பா.ஜ.க.வை உமர் அப்துல்லா கிண்டலாக தாக்கினார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசியமாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் பா.ஜ.க.வுக்கு இருக்காது என்று தெரிவித்தார்.  

பா.ஜ.க.

2019ல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அதன் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்ததால், ஜம்மு காஷ்மீரில் உடனடியாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு தைரியம் இருக்காது என்று உமர் அப்துல்லா கிண்டலாக தாக்கியுள்ளார்.  ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் உமர் அப்துல்லாவும், மெகபூபா முப்தியும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

ஜம்மு காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவியுமான மெகபூபா முப்தி கூறுகையில்,  கர்நாடக தேர்தல் முடிவுகள் நம்பிக்கையின் கதிரை காட்டியுள்ளன. பா.ஜ.க. வழக்கம் போல் சூழ்நிலையை வகுப்புவாதமாக்க முடிந்தவரை முயற்சித்தது. அவர்கள் பஜ்ரங்பலி, மதம், இந்து-முஸ்லிம் ஆகியவற்றை கூட உரைக்கு  கொண்டு வந்தனர். பிரதமர் மோடி மத அடிப்படையில் உரை எடுக்க முயன்றார். இருந்தபோதிலும், மக்கள் இந்த பிரச்சினைகளை ஒரங்கட்டி விட்டு, காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை நடத்திய வளர்ச்சி பிரச்சினையைத் தேர்ந்தெடுத்தனர் என்று தெரிவித்தார்.