வேலைக்கு சென்ற முதல்நாளே செவிலியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

 
rape

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே செவிலியர் ஒருவர் கூட்டு பாலியல் செய்து கொலை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

18-year-old nurse gang raped and murdered in Unnao hospital: Noor Alam and  other three staff members named in FIR

பங்கர்மாவ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 18 வயது செவிலியர், கடந்த சனிக்கிழமையன்று வேலைக்கு சேர்ந்தார். அதற்கு மறுநாள் மாலை மருத்துவமனையின் வெளிப்புற சுவரில் அந்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனே அவரது பெற்றோருக்கு, உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனையிலிருந்து அழைப்பு சென்றுள்ளது. இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் செவிலியரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் பகலில் அந்த மருத்துவமனையில் நோயாளிகள் இல்லாததால், இரவு பணிக்கு வருமாறு மருத்துவமனை உரிமையாளர் செவிலியரிடம் கூறியுள்ளார். அதன்படி, அவரும் இரவுநேரப் பணிக்கு சென்றுள்ளார். அன்றுதான் அந்த செவிலியர் கூட்டு பாலிய வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு. கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்பின் குற்றவாளிகள் அவரது உடலை தற்கொலை செய்துகொண்டது போல மருத்துவமனையின் வெளிப்புற சுவரில் கட்டி தொடங்கவிட்டு சென்றுள்ளனர். இச்சம்பவத்துக்கு பின் மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள், இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவர்களை தேடிவருகின்றனர்.