தேர்வு எழுதும் போது காண்பிக்காததால் நண்பனை கொடூரமாக தாக்கிய சக மாணவன்

தெலங்கானாவில் தேர்வு எழுதும் போது காண்பிக்காததால் நண்பனை உயிர் போராடும் நிலைக்கு அடித்த சக மாணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நல்கொண்டா கூட் ரோட்டில் உள்ள எஸ்.ஐ.எஸ் தொழிற்கல்வி ஜூனியர் கல்லூரியில் ஆரிப், கசாப் ஆகியோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் நடந்த தேர்வில் ஆரிப் எழுதிய தேர்வு விடைத்தாளை காண்பிக்கும்படி கசாப் கேட்டுள்ளார். ஆனால் ஆரிப் காண்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தேர்வு முடிந்ததும் கசாப் கல்லூரி வளாகத்தின் கீழ் வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்தான். அப்போது அங்கு ஆரிப் வந்தபோது கசாப் சண்டைக்கு சென்று பேப்பர் காண்பிக்கும்படி கூறினால் காண்பிக்க மாட்டாயா எனக்கூறி கண்மூடிதனமாக தாக்கி காலில் எட்டி உதைத்தான்.
இதில் ஆரிப் தலையில் அடிப்பட்டு நிகழ்விடத்திலேயே சுருண்டு விழந்தான். உடனடியாக சக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் தலையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் ஆரிபின் மூலையில் ரத்தம் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆரிப்புக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரிப்பின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, ஐதராபாத் சதர் காட் காவல் நிலைய போலீசார் கல்லூரி வளாகத்தில் இருந்த சி.சி.கேமிரா காட்சிகளின் அடைப்படையில் விசாரித்து வருகின்றனர்.