ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு

 
ugc

 NCET, UGC NET தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

ugc
 நாட்டின் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகையைப் பெற  யு.ஜி.சி நெட்(UGC NET) தேர்வு அவசியம் இதில் தேர்ச்சி பெற்றால் தான் மேற்கூறிய சலுகைகள் கிடைக்கும்.  ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் இரண்டுமுறை நெட் தேர்வு நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில், இந்த தேர்வை ரத்து செய்து  மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.


 

tt

இந்நிலையில்  ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.21 ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும். சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும்.  என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும்என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.