கேரளா குண்டுவெடிப்பு - NSG அதிகாரிகள் ஆய்வு

 
NSG

கேரளவில் குண்டுவெடிப்பு நடந்த பகுதியில்  தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் களமச்சேரி என்ற இடத்தில் ஜெபக்கூட்டம் நடைபெற்றிருக்கும்போது மூன்று வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்ட இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் காரணமாக 36 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய டொமினிக் மார்ட்டின் கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை எனவும் திருச்சபையின் செயல்பாடுகள் பிடிக்காததால் குண்டுவைத்ததாக மார்ட்டின் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், கேரளவில் குண்டுவெடிப்பு நடந்த பகுதியில்  தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து கேரளா களமச்சேரி கிறிஸ்தவ வழிபாட்டு மையத்தில் NSG அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  மத வழிபாட்டு மையத்தில் உள்ள கார்களில் தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.