நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது!

 
Parliament

நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், தனி நபா் தீா்மானங்கள் மீதான அலுவல்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி தெரிவித்து இருந்தார். மேலும் இந்த கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலைய்ல், இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த கூட்டத்தொடரே கடைசி கூட்டத்தொடராக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், தனி நபா் தீா்மானங்கள் மீதான அலுவல்கள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நட்டைபெறும். ஆனால் தற்போது சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.