வேக்சின் சான்றிதழில் பிரதமரின் போட்டோ திடீர் நிறுத்தம்... காரணம் என்ன?

 
தடுப்பூசி சான்றிதழ்

நாடே எதிர்பார்த்து காத்திருந்த உத்தரப் பிரதேச மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. 403 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலம். அதேபோல 80 மக்களவை தொகுதிகளையும் கொண்டுள்ளது. அதனால்தான் பிரதமர் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் கவனம் பெறுகிறது. அங்கு வெற்றியைத் தக்கவைக்க பாஜக போராடி வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

JMM blames PM for turning nation into a graveyard - Telegraph India

பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரையிலும் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 10ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதேபோல மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடக்கின்றன. கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்கள் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி வாக்குபதிவு நடக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலாகின்றன. இதன் காரணமாக இந்த மாநிலங்களில் வழங்கப்படக்கூடிய தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

A Madhya Pradesh Twist To Record Vaccination Numbers On PM Modi Birthday

இந்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எடுத்துள்ளது. வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பிரதமர் மோடியின் படம் தடுப்பூசி சான்றிதழில் இடம்பெறாது என சொல்லப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சான்றிதழ்களில் வழக்கம் போல பிரதமரின் படம் இடம்பெறும். கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகள் இயன்றவரை டிஜிட்டல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேபோல ஆன்லைனில் நாமினேஷன் செய்ய வேண்டும், கூட்டங்களில் தடுப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.