"டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்த அனுமதி இல்லை"- காவல்துறை கடிதம்

 
"டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்த அனுமதி இல்லை"- காவல்துறை கடிதம்

டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை (அக்.10) போராட்டம் நடத்த அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை CJP-க்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை முன்னிட்டு, மத்திய டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் 24 மணி நேர மொபைல் இணையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜன்பத்-கர்த்தவ்யா பாதை சந்திப்பிலிருந்து நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மொபைல் இணைய சேவைகள் முடக்கப்படும் என, டெல்லி காவல்துறை துணை ஆணையர் அறிவித்துள்ளார். சிறப்புத் தீவிர மறுஆய்வில் (SIR) நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, குமார் பதவி விலகக் கோரி, மத்திய டெல்லி மற்றும் நகரின் பிற பகுதிகளில் சி.ஜே.பி. ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை (அக்.10) போராட்டம் நடத்த அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது. முன்பு நடைபெற்ற போராட்டங்களின் போது ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றாததாலும், விதியின் படி, 10 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்காததாலும் அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.