"நாங்க ஒரு சின்ன கட்சி, கூட்டணி குறித்து யாரும் பேசல" - குமாரசாமி பேட்டி

 
tn

கூட்டணி குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்கு பிறகு முன்னிலை விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  கிட்டதட்ட பிற்பகலுக்குள் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது தெளிவாக தெரிந்து விடும்.

tn

கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் உள்ள 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207 , ஆம் ஆத்மி  கட்சி 217,  பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2213 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் கண்ட நிலையில்,  முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும் , முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத தலைவர் குமாரசாமி  சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டனர். 

tn
இந்நிலையில்  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ,  கர்நாடக பேரவை தேர்தலில் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள தயார். கூட்டணி குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை. கர்நாடக தேர்தலில் இரு தேசிய கட்சிகளும் அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சிறிய கட்சி. எங்களுக்கு பெரும் முக்கியத்துவம் இல்லை .இன்னும் சில மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்து விடும் .நல்ல வளர்ச்சி எதிர் பார்த்து காத்திருக்கிறேன். எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றார்.

கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு முந்தையம் மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாக்கும்,  மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும்  போட்டி ஆரம்பமாகியுள்ளது.

tn

பாஜகவில்  முதல்வர் பதவியை கைப்பற்ற பசவராஜ் பொம்மை,  அமைச்சர் அசோகா , முன்னாள் அமைச்சர் சி. டி .ரவி , மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இடையே போட்டி நிலவுகிறது. ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமைந்து பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கும்.