மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, நாங்கள் கெஜ்ரிவாலுடன் நிற்கிறோம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

 
சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாம்…….. நிதிஷ் குமார் கருத்து…..

யூனியின் பிரதேச உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது அரசியலமைப்பு எதிரானது என்றும் முதல்வர் கெஜ்ரிவாலுடன் நாங்கள் நிற்கிறோம் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் சிங் ஆகியோர் நேற்று டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது யூனியின் பிரதேச உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை அரசியலமைப்பு எதிரானது என்று நிதிஷ் குமார் தெரிவித்தார்.

மத்திய அரசு

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், இந்த அவசர சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் எவ்வாறு பறிக்கப்படும்?. இது அரசியலமைப்புக்கு எதிரானது. நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறோம். நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம் என்று தெரிவித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது:  இந்த அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டால் பா.ஜ.க.வுக்கு வலுவான செய்தியை அனுப்ப முடியும். 

அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று நிதிஷ் குமார் ஜி உடனான சந்திப்பின்போது, டெல்லி அரசுக்கு ஆதரவான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுத்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்த விவகாரத்தில் டெல்லி மக்களுடன் நிற்பதாக அவர் கூறினார்.  மத்திய அரசு இந்த அவசர சட்டத்தை மசோதாவாக கொண்டு வந்தால், பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்தால் மாநிலங்களவையில் அந்த மசோதாவை தோற்கடிக்க முடியும்., அப்படி நடந்தால், 2024ல் பா.ஜ.க. அரசு வெளியேறும்  என்ற செய்தியை அது அனுப்பும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.