முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? - நிதிஷ் குமார் விளக்கம்

 
Nitish

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். 

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த கூட்டணியில் ஏற்பட்ட உரசல் காரணமாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கைக்கோர்க்க விரும்பினார். இதற்காக அவர் பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சில நிபந்தனைகளுடன் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அம்மாநில ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார்.

Nitish kumar

இந்த நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக பேசிய நிதிஷ் குமார்,  பல்வேறு தரப்பிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமாறு வந்த கோரிக்கையை ஏற்று ராஜினாமா  செய்துள்ளேன். எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணிகளை நான் செய்து வந்தேன், ஆனால் மற்றவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து நான் தற்போது விலகி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் . அரசியல் சூழல் காரணமாக லாலு கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என கூறினார்.