பாஜக செயல் தலைவராக நிதின் நபின் பதவி ஏற்றார்
பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பதவி ஏற்றார். அமித்ஷா மற்றும் நட்டா முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டு பணிகளை தொடங்கினார்.

பாஜகவின் மிக மூத்த தலைவரான நபின் கிஷோத் சின்ஹாவின் மகனான, பீகாரைச் சேர்ந்த நிதின் நிபின் பாரதி ஜனதா கட்சியின் புதிய செயல் தலைவராக பதவியேற்றுள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றிருந்த நிலையில் நம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவருக்கு தேசிய அளவிலான மிகப்பெரிய அங்கீகாரத்தை பாரதிய ஜனதா கட்சி வழங்கி உள்ளது.
தேசிய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, பீகார் அமைச்சராக உள்ள் நிதின் நபினை செயல் தலைவராக நியமித்து பார்லிமெண்ட்ரி போர்ட் அறிவித்தது. பாஜகவில் செயல் தலைவராக அறிவிக்கப்படுபவரே தேசிய தலைவராகவும் நியமிக்கப்படும் வழக்கம் உள்ளது. பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் சாலை கட்டுமான அமைச்சராக இருந்தவர் நிதின் நபின்.


