சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 56 கோடி லிட்டர் எரிபொருள் வீண்... மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 சதவீத பணிகள் நிறைவடைந்து விடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். செயற்கைக் கோள் உதவி, ஏஐ, ஃபாஸ்டேக் இணைக்கப்பட்ட தொழில்நுட்பம் மூலம் 2027 மார்ச் முதல் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 71 கோடி மணிநேரம் வீணடிப்பு, 56 கோடி லிட்டர் எரிபொருள் வீணாவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். பிப்ரவரி-மார்ச் மாதத்திற்குள், நாடு முழுவதும் இந்த சுங்கச்சாவடி தடையற்ற போக்குவரத்து அமைப்பு நடைமுறைக்கு வந்துவிடும் எனக் கூறியுள்ள நிதின்கட்கரி, இந்தத் தடையற்ற அமைப்பு மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செயல்படும். யாரும் நிறுத்த வேண்டியிருக்காது. இயல்பாகவே, காத்திருப்பு நேரம் அறவே இல்லை எனவும் கூறினார்.

