“விஜய்யின் பொருளாதார இலக்கு ஆச்சரியமளிக்கிறது... He is very Impressive”- நிதி ஆயோக் துணை தலைவர் பாராட்டு
முதல்வர் விஜயின் பொருளாதார பார்வை என்னை கவர்ந்தது என நிதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி கூறியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். குறிப்பாக நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதே தமிழ்நாட்டின் இலக்கு” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி, “சினிமாவுல தான் பாத்திருக்கேன்... He is very Impressive. தமிழ்நாடு 2035க்குள் $1.5 டிரில்லியன் பொருளாதாரமாக வளர வேண்டும் என்ற முதலமைச்சர் விஜயின் தொலைநோக்கு பார்வை என்னை மிகவும் கவர்ந்தது. திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த தலைவரை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது, அவரது வளர்ச்சி இலக்கும் தெளிவான பார்வையும் ஆழமாக ஈர்த்தது” என்றார்.

