#BREAKING UPI-க்கு 0.4% கட்டணம்? யாருக்கு?
பெரிய வணிக நிறுவனங்களின் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பெரிய வணிக நிறுவனங்களின் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.1-1.5 கோடிக்கு மேல் விற்பனை செய்யும் வணிகர்களின், ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் UPI பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லை. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனுப்பும் பணத்துக்கும் MDR இல்லை. 0.4% MDR என்றால் ₹10,000 பரிவர்த்தனைக்கு ₹40 கட்டணம். இந்த கட்டணத்தில் 40% வழங்கும் வங்கிக்கும், தலா 30% UPI செயலி மற்றும் பணம் பெறும் வங்கிக்கும் செல்லும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. NPCI நடைமுறைகளை இறுதி செய்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் அறிவிப்பு வெளியாகலாம். கட்டணம் துறைக்கு ஏற்ப மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

