மீண்டும் நிதித்துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்

 
 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சிவ்ராஜ் சிங் சவுஹானுக்கு வேளாண் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Image

கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர்களாக சுரேஷ் கோபியும், இந்திரஜித் சிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சிறு, குறு & நடுத்தர தொழில் துறை அமைச்சராக ஜித்தன் ராம் மஞ்சி, பெட்ரோலியத்துறை அமைச்சராக ஹர்திப் சிங் பூரி, விளையாட்டுத்துறை அமைச்சராக சிராக் பஸ்வான், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக கஜேந்திர சிங் செகாவத், சுகாதாரத்துறை  அமைச்சராக ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image

மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்னவ், மத்திய நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன், மத்திய நகர்புற வளர்ச்சி மற்றும் ஆற்றல் துறை அமைச்சராக எம்.எல் கட்டார், விவசாயத்துறை அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக ராம் மோகன் நாயுடு, கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வேத்துறை அமைச்சகத்துடன், செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும் அஷ்வினி வைஷ்னவ் நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.