பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி

 
 கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி… சிகிச்சை அளித்த நர்ஸும் பாதிப்பு!  கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி… சிகிச்சை அளித்த நர்ஸும் பாதிப்பு!

கேரளா மாநிலம், பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

Nipah virus returns in Kerala 383 people under observation tnn | மீண்டும் நிபா  வைரஸ்: அச்சம் தரும் அறிகுறிகள்! 383 பேர் கண்காணிப்பில், தடுப்பூசி இல்லையா?

கேரளா மாநிலம் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மலப்புரத்தை சேர்ந்த ஒருவர் நிபா பாதிப்பால் உயிரிந்தார். மேலும் கடந்த சனிக்கிழமை பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் கேரளா நிபா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு, நிபா பாதிப்பால் உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைபடுத்தி கேரளா சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கோவை - கேரளா எல்லைகளில் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிபா பாதிப்பால் உயிரிழந்த பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டை சேர்ந்த நபரும் தொடர்பில் இருந்த 42 பேருக்கு நிபா பாதிப்பு குறித்து அறிய மாதரிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் உயிரிழந்த நபரின் மகனுக்கு நிபா உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் யார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடந்து வருகிறது.