மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து.. உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு..

 
மெற்கு வங்க ரயில் விபத்து

மேற்குவங்கத்தில் பிகானர்-கௌகாத்தி எஸ்பிரஸ் ரயில் தரம்புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டம் மைனாகுரி பகுதியில் நேற்று மாலை  பிகானர்- கவுஹாத்தி  எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், நிகழ்விடத்திலேயே  3 பயணிகள்  உயிரிழந்தனர். 2 பேர் மைனாகுரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 45 பேர்   மைனாகுரி மருத்துவமனை மற்றும் வடக்கு பெங்கால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம் ரயில் விபத்து

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி,  ரயில்வே அமைச்சரிடம் பேசி மேற்குவங்க ரயில் விபத்து தொடர்பாகக் கேட்டறிந்ததாகவும்,  உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

west bengal

இதற்கிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக  வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.  இந்த விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வடகிழக்கு ரெயில்வே, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் மேற்குவங்க ரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.